
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு ஆடம்பரமான கடலோர மாளிகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 3 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 35.5 கோடி) மதிப்புள்ள இந்த ஆடம்பர சொகுசு வீடு வெறும் 1,180 ரூபாய்க்குக் கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும் மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்படி இவ்வளவு குறைவான விலையில் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? இந்தப் பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
rep image
இங்கிலாந்தின் கடலோரத்தில் அமைந்திருக்கும் இந்த வீட்டை அதன் உரிமையாளர் ஒரு தனித்துவமான லாட்டரி முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மக்கள் இதனைக் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறார்.
அதன்படி 1180 (£10) செலுத்தி லாட்டரி டிக்கெட்டை வாங்கினால் இந்த வீடு வெல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட் விற்கப்பட்ட பிறகு இந்த வீட்டை வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து உரிமையாளர் தெரிவிப்பதாகவும், இந்த முறையில் வெற்றியாளருக்கு வீடு மட்டும் இல்லாமல் சில கூடுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இதே போன்ற லாட்டரி முறை நடந்துள்ளது. இதில் பலரும் தங்களது கனவு வீடுகளை வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாட்டரியில் பங்கேற்க அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டை வாங்கி, அதற்கான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த வாய்ப்பு உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது.