• August 28, 2025
  • NewsEditor
  • 0

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து எனக்கு தெரியாது

பின்னர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “நான் முதலமைச்சராக இருந்தபோது தான் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினேன். ஜெயலலிதாவால் கூட அது முடியாமல் போனது என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து எனக்கு தெரியாது.

டி.டி.வி.தினகரன்

ஒருவேளை அவர் அப்படி பேசி இருக்கும் பட்சத்தில் அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வந்தது. அவர் ஏழை, எளிய, அடித்தட்டு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார். அவர் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை நான் வன்மையாக கண்டிப்பேன்.

விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்

2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அது போல் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் நான் இதனை கூறுகிறேன். விஜயின் அரசியல் பிரவேசம் பல்வேறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை. இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாகத்தான் பேசுவேன்.

tvk vijay

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 75 ஆண்டு கட்சிக்கும், 50 ஆண்டுகால கட்சிக்கும் இணையாக இருக்கிறது. எனவே நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுக்கு இல்லை. எங்களது இயக்கத்தை பலப்படுத்த தான் கவனம் செலுத்துகிறோம். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை கூறி வருகிறோம்.

வருகிற தேர்தலில் அ.ம.மு.க உறுதியாக முத்திரை பதிக்கும். அ.ம.மு.க தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம் .

தற்போதும் அந்தக் கூட்டணியில்தான் உள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறோம். ஓ‌.பன்னீர்செல்வம் வேறு வழி இல்லாமல் கூட்டணியை விட்டு வெளியே சென்றார். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு அழைத்து வர டெல்லி தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *