
சென்னை: 50 ஹீரோயின்கள் படத்தின் கதை பிடித்திருந்தும் தன்னுடன் நடிக்க முடியாது என்று சொல்லி புறக்கணித்துவிட்டதாக நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பாலா பேசியதாவது: “இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எப்படி நடந்ததென்றால், அலுவலகத்தில் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ? என்று கேட்பார்கள். பாலா என்று சொன்னதும் நான் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அது அவர்கள் மீதான தவறு கிடையாது. இப்படியே ஒவ்வொரு புறக்கணிப்பாக நடந்து கொண்டிருந்தது. இப்படியே 50 பேர் என்னை புறக்கணித்தனர். நானும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. 51வது ஆளாக வந்தவர்தான் நமிதா கிருஷ்ணமூர்த்தி. கதையை கேட்டபிறகு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்டிப்பாக நான் பண்ணுகிறேன் என்று சொன்னார்” இவ்வாறு பாலா பேசினார்.