• August 27, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: உடல்​நலக் குறைவு காரண​மாக மதுரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். திமுக​வின் மூத்த அமைச்​சர்​களில் ஒரு​வர் திண்​டுக்​கல் ஐ.பெரிய​சாமி. உடல்​நலக் குறைவு காரண​மாக மதுரை மாட்​டுத்​தாவணி பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து மருத்​து​வ​மனை நிர்​வாகத் தரப்​பில் கூறும்​போது, “அமைச்​சர் ஐ.பெரிய​சாமிக்கு வயிற்று வலி உள்​ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்​காக 2 நாட்​களுக்கு முன்பு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டார். அவருக்கு மருத்​து​வப் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. அதன் அடிப்​படை​யில், அமைச்​சருக்கு மருத்​து​வர்​கள் உரிய சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். தற்​போது அவர் நலமாக உள்​ளார்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *