• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தி​யையொட்டி சென்​னை​யில் நேற்று முக்​கிய சந்​தைகளில் விற்​பனை களை​கட்​டியது. விநாயகர் சிலை மற்​றும் பூஜைக்கு தேவை​யான பொருட்​களை பொது​மக்​கள் ஆர்​வ​மாக வாங்​கிச் சென்​றனர். விடு​முறையையொட்டி 3 லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்கு பயணித்​தனர்.

நாடு முழு​வதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. இதை யொட்​டி, சென்​னை​யின் கோ​யம்​பேடு, பாரி​முனை, தியாக​ராய நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய வணிகப் பகுதிகள் காலை முதலே பரபரப்​பாக காணப்​பட்​டது. அதே​நேரம், பொருட்​கள் மற்​றும் பூக்​களின் விலை​யும் வழக்​கத்தை விட அதி​கரித்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *