
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான, பூந்தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்படும் 3 வழித்தடங்களில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். இத்தடத்தில் பூந்தமல்லி – போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான (10 கி.மீ.) இருவழிப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. சிக்னல், இழுவைத் திறன் உட்பட பல்வேறு தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்பட்டன.