
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, வேற்று மத ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்துக்கள் என கூறி, போலி சான்றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழுவி, அந்த மதத்தை பின்பற்றி வரும் தேவஸ்தான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
முதலில் 22 வேற்று மத ஊழியர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் 6 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.