• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்​கப்​பட்டு பூஜைகள் நடை​பெறுகின்​றன. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்​னணி உள்பட 65-க்​கும் மேற்​பட்ட இந்து அமைப்​பு​கள் மற்​றும் குடி​யிருப்​பு​வாசிகள், இளைஞர் அமைப்​பினர் என பல்​வேறு தரப்​பினர் பிரம்​மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட போலீ​ஸாரிடம் அனு​மதி கோரி​யிருந்​தனர்.

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் சுமார் 35,000 சிலைகளை வைத்து வழிபட போலீ​ஸார் அனு​மதி வழங்​கினர். சென்​னையைப் பொறுத்​தவரை 1,500 சிலைகளுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, விநாயகர் சிலைகள் நிறு​வுமிடத்​தின் நில உரிமை​யாளர்​கள், சம்​பந்​தப்​பட்ட உள்​ளாட்சி அமைப்​பு​கள், நெடுஞ்​சாலைத்​துறை அல்​லது அரசுத் துறை​யிட​மிருந்து அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும். தீயணைப்​புத்​துறை, மின்​வாரி​யம், ஆகிய​வற்​றிட​மிருந்து தடை​யில்லா சான்​றுகள் பெற்​றிருக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *