• August 26, 2025
  • NewsEditor
  • 0

ஒவ்வொரு நிமிஷமும் உங்க கடைக்கு, அலுவலகத்துக்கு, தொழிற்சாலைக்கு பணம் வருது போகுது. ஆனா உங்க பாக்கெட்ல எவ்வளவு நிக்குது?

பிசினஸ்ல சூப்பர், ஆனா தனி வாழ்க்கையில?

150 வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காவில ஜான் ராக்ஃபெல்லர்னு ஒரு பையன் சின்ன எண்ணெய் வியாபாரம் ஆரம்பிச்சான். எல்லாரையும் போல இல்லாமல் அவன் கொஞ்சம் வித்தியாசமா செயல்பட்டான்.

சம்பாதிச்ச ஒவ்வொரு டாலரையும் – நிறுவன வளர்ச்சிக்கு, சொந்த சேமிப்புக்கு, நல்ல காரியங்களுக்குன்னு மூணு பாகமா பிரிச்சான். முடிவு?

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய செல்வந்தராக அந்தப் பையன் உயர்ந்து காட்டினான். ஆனா இன்னைக்கு நம்ம வியாபாரிகளும் தொழில் செய்வோரும் என்ன தப்பு செய்றாங்க? பிசினஸ் மட்டுமே வாழ்க்கைனு நெனச்சிக்கறாங்க!

நம்பர் 1

உங்க கதையம் இதுதானா?

✓ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை மறுபடியும் பிசினஸ்லயே போடுறீங்களா?
✓ வரி, அவசர செலவு, எதிர்கால வளர்ச்சிக்கு எவ்வளவு வெச்சிருக்கணும்னு தெரியலையா?
✓ கரண்ட் அக்கவுண்ட், வங்கி வட்டி, சிட் ஃபண்ட்ஸ் தாண்டி காசை எங்க போடலாம்னு குழப்பமா?
✓ வியாபாரத்தை பாதிக்காம தனிப்பட்ட செல்வம் சேர்க்க முடியுமான்னு சந்தேகமா?

அதிர்ச்சி தரும் உண்மை!

சமீபத்துல நடந்த ஆய்வு ஒண்ணுல தெரிஞ்சது: 100-ல 85 பேர் சிறிய, நடுத்தர தொழில்முனைவோர் 10 வருஷம் கடுமையா உழைச்சாலும் தங்களோட பர்சனல் அக்கவுண்ட்ல 2-3 லட்ச ரூபா மட்டும்தான் வெச்சிருக்காங்க! ஏன் இப்படி? காரணம் அவங்களுக்கு “பணத்தோட உளவியல்” தெரியல!

மாற்றம் வேணும்!

Warren Buffett
Warren Buffett – வாரன் பஃபெட்

வாரன் பஃபெட் சொன்னது ஞாபகம் இருக்கா? “உங்களின் மிகச்சிறந்த முதலீடு நீங்கதான். அதனால உங்களின் சம்பாத்தியத்தை முதலில் உங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்குங்க”ன்னு சொல்றாரு. ஆனா நம்ம வழக்கமான வியாபார எண்ணம் என்ன? “லாபம் வந்தா மறுபடியும் அதை வியாபாரத்திலேயே போடு!” இதுதான் பிரச்சினையோட ஆணிவேர்!

வெற்றிக்கான சூத்திரம்

ஜப்பானிய தொழிலதிபர்கள் ஒரு கொள்கையைப் பின்பற்றுவாங்க: ‘கைசென்’ – அதாவது சின்னச் சின்ன, தொடர்ச்சியான முன்னேற்றங்கள். அதே மாதிரி உங்க பிசினஸ் வருமானத்துலயும் அப்பப்போ கொஞ்சம் பணத்தை எடுத்து உங்க தனிப்பட்ட வாழ்க்கைக்காக ஒதுக்கணும்.

பிசினஸ் லாபத்தை மூணு விதமாக பிரியுங்க:

60% மறுபடியும் பிசினஸ்ல முதலீடு செய்யப்படணும்
25% நம்மளோட செல்வம் உருவாக்குறதுக்கு ஒதுக்கப்படணும்
15% அவசர காலத்துக்கு ஒதுக்கப்படணும்.

கொரோனா நமக்கு என்ன கத்துக்கொடுத்துது? “பிசினஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது !” உங்களோட தனிப்பட்ட பண பாதுகாப்பு இல்லாம நீங்க எவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினாலும், ஒரு பேரிடி உங்களை நிலைகுலைய வைச்சிரும்!

உங்களுக்கு பிஸினஸ்ல ஜெயிச்சு, தனிப்பட்ட செல்வமும் சேர்க்கணுமா?

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம், பிசினஸ் பண்றவங்களுக்காகவே ஒரு சிறப்பு வெபினாரை வர்ற ஆகஸ்ட் 28 அன்னைக்கு நடத்த போறாங்க!

இந்த வெபினாரில், பிசினஸில் நீங்க பணத்தை எப்படி கையாளனும்னு சொல்லித்தருவது மட்டுமில்லாம, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணத்தை எப்படி நிர்வகிக்கணும்னு சொல்லித் தரப்போறாங்க!

தலைப்பு: தொழில் முனைவோருக்கான நிதி மேலாண்மை
தேதி: ஆகஸ்ட் 28, 2025, வியாழன்
நேரம்: மாலை 7:30 முதல் 9:00 வரை
பேச்சாளர்: பாலாஜி வெங்கடேசன், ரீஜினல் மேனேஜர் – IFA,  நிப்பான் லைஃப் இந்தியா அஸெட் மேனேஜ்மேண்ட் 

தொழில்முனைவோர் அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்த வெபினாரில் 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். 

இப்போவே முன்பதிவு செய்ய: https://forms.gle/QvfSkdgMYhKvrQjg6

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *