
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் ரவி மோகன்.
‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
ரவி மோகனின் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ‘ப்ரோ கோட்’ திரைப்படம் வரவிருக்கிறது.
இதன் இரண்டாவது திரைப்படமாக ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தை அறிவித்திருக்கிறார்.
ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு ‘An Ordinary Man’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு திரைப்படங்களுக்குமான பூஜையும் இன்று இந்த நிகழ்வில் போடப்பட்டது.
பூஜைக்குப் பிறகு நடிகர் யோகி பாபு பேசும்போது, “அவர் படம் டைரக்ட் பண்ணும் விஷயத்தைப் பற்றி நாங்க ‘கோமாளி’ திரைப்படம் நடக்கும்போதே பேசியிருந்தோம்.
அப்பப்போ கதைகளையும் பேசுவோம். அப்படி ரவி மோகன் சார் ‘நான் படம் டைரக்ட் பண்ணினால் உன்னை வைத்துதான் பண்ணுவேன் யோகி பாபு’னு சொன்னார்.” என்றார்.

ரவி மோகன் பேசுகையில், “எனக்கு இந்த நிகழ்வு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குதுனு எனக்குதான் தெரியும். யோகி பாபுவை ஹீரோவாக வைத்துதான் படம் பண்ணனும்னு நான் ஆசைப்பட்டேன்.
இப்படியான சந்தோஷமான நேரத்தில் என்னுடைய இரண்டு திரைப்படங்களை இங்கு அறிவித்திருக்கேன். நானும் டைரக்டர் ஆகிட்டேன்!” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…