
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: எஸ்எஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ராம்லீலா மைதானத்தில் அமைதியாக போராட்டம் நடத்திய தேர்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது ஒரு கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம்.
வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் முதலில் தேர்தல்களில் மோசடிகளைச் செய்தது, பின்னர் தேர்வுகளில் முறைகேடுகளை அனுமதித்தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்குவதில் தோல்வியடைந்தது, இறுதியில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் குரல்களை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.