• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் சூர்ய காந்த், விக்​ரம் நாத், ஜே.கே.மகேஸ்​வரி, பி.​வி.​நாகரத்னா ஆகிய 5 உறுப்​பினர்​களை கொண்ட உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் நேற்று பிற்​பகல் கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில் நீதிப​தி​கள் ஆலோக் ஆராதே, விபுல் எம்​.பஞ்​சோலி ஆகிய இரு​வரை​யும் உச்ச நீதிமன்ற நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு பரிந்​துரை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​தால், குடியரசுத் தலை​வர், இரு​வரை​யும் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமித்து உத்​தர​விடு​வார்.

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக விபுல் எம்​.பஞ்​சோலி நியமிக்​கப்​பட்​டால் அவர் 2031 மே மாதம் முதல் 16 மாதங்​களுக்கு தலைமை நீதிப​தி​யாக பதவி வகிப்​பார். 1964-ம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆராதே, மத்​தி​யபிரதேச உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2009 டிசம்​பரில் கூடு​தல் நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார். மும்பை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக பதவி வகித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *