
சென்னை: தமிழகத்தில் 2021-22-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 4 ஆண்டுகளில் சுமார் ரூ.6.70 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக, எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. “முற்போக்கு தமிழகத்தில் முதலீடு, மேம்பாடு மற்றும் வளர்ச்சி” என்ற 2021-22 முதல் 2024-25 வரையிலான ஆய்வின் 2-வது பதிப்பை, எம்எஸ்எம்இ ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் டி.எஸ்.ராவத் வெளியிட்டார்.
இது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகம், 2021-22 மற்றும் 2024-25-க்கு இடையில் சுமார் ரூ.6.70 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது.