• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்​திப்பு நிகழ்​வின்​போது தலை​மை​யிடம் நேரடி​யாக தெரிவிக்​கப்​படும் உட்​கட்சி பிரச்​சினை​கள் மீது முறை​யான நடவடிக்கை எடுக்​கப்​ப​டாத​தால் திமுக நிர்​வாகி​கள் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. தமிழகத்​தில் சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் அடுத்​தாண்டு நடை​பெற உள்​ளது. இதற்​காக அனைத்து கட்​சிகளும் தேர்​தல் பணி​களில் தீவிரம் காட்டி வரு​கின்​றன.

இதில் ஆளும் திமுக சார்​பில் கடந்​தாண்டே துணை முதல்​வர் உதயநி​தி, அமைச்​சர்​கள் கே.என்​. நேரு, எ.வ.வேலு, தங்​கம் தென்னரசு மற்​றும் ஆர்​.எஸ்​.​பாரதி ஆகியோர் அடங்​கிய குழு அமைக்​கப்​பட்​டது. இந்​தக் குழு மாவட்ட வாரி​யாக​வும், அணி​கள் வாரி​யாக​வும் நிர்​வாகி​களை சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​யது. அதன்​பின் நிர்​வாகி​கள் நியமனம், மாவட்ட செய​லா​ளர் எண்ணிக்கை அதி​கரிப்பு உட்பட பல்​வேறு பரிந்​துரைகளை அக்​குழு அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *