
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவைகள் தற்போது நம்ம சென்னை செயலி, மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in), 1913 அழைப்பு மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.