• August 25, 2025
  • NewsEditor
  • 0

இங்கிலாந்தின் லாங்காஷையரில் வசிக்கும் 16 வயது மாணவி மில்லி ஜான்சன், தனது பொதுத் தேர்வு முடிவுகளைப் பெறும்போது தனது ஆட்டையும் உடன் அழைத்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற மாணவர்கள் பெற்றோர் அல்லது நண்பர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தபோது, மில்லி தனது நெருங்கிய நண்பனான ஒரு ஆட்டுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

“நார்த் ரொனால்ட்சே” இனத்தைச் சேர்ந்த அந்த ஆட்டிற்கு மில்லி கெவின் என்று பெயர் வைத்துள்ளார். ”கெவின் எனக்கு மிக நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னுடன் வருவான். தேர்வு முடிவுகள் வரும் நாளில் நான் பதட்டமாக இருந்தேன், ஆனால் கெவின் என்னுடன் இருந்ததால் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன்” என்று மில்லி கூறியிருக்கிறார்.

கெவின் இதற்கு முன்னதாகவே பள்ளி விழாக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதாக மில்லி கூறுகிறார்.

தேர்வில் மில்லி நல்ல மதிப்பெண்களைப் பெற்றதோடு, விலங்கு மருத்துவ நிலையத்தில் நர்ஸ் பயிற்சிக்கான அழைப்பையும் பெற்றிருக்கிறார்.

மேலும், மில்லியும் கெவினும் இணைந்து நவம்பரில் நடைபெறும் “யங் ஷெப்பர்ட் ஆஃப் த இயர்” போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். இதற்கு முன் நடந்த வேளாண் கண்காட்சியில், கெவின் முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *