
கொல்கத்தா: மேற்கு வங்க பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்வதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அமலாக்கத் துறை கைது செய்தது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இன்று அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை சோதனைகளின்போது சாஹா சுவரில் ஏறி குதித்து தப்பிக்க முயன்றதுடன், வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் தனது செல்போன்களையும் வீசியுள்ளார். அப்போது சாஹாவை கைது செய்த போலீசார், அவர் வீசிய செல்போன்களையும் மீட்டுள்ளனர்.