• August 25, 2025
  • NewsEditor
  • 0

‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பிறகு பயங்கர பிஸியாக வலம் வருகிறார் நடிகை ஸ்வாசிகா.

‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் கதாநாயகி சஞ்சனாவுக்கு அம்மாவாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்த்திருந்தார்.

Asodha Character – Swasika

சமீபத்தில் ‘சூரி’ நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்திலும், சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்திலும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்வாசிகா.

சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தனக்கு தொடர்ந்து அம்மா கேரக்டர்களே வருவதாகவும், ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்வாசிகா பேசுகையில், “எனக்கு தொடர்ந்து அம்மா வேடங்களிலேயே நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. நடிகர் ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டது எனக்கு அதிர்ச்சியை தந்தது.

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் அம்மா கேரக்டரில் நடிப்பதற்குதான் என்னிடம் கேட்டார்கள். நான் அதை மறுத்துவிட்டேன்.

 ஸ்வாசிகா
ஸ்வாசிகா

நான் அதை ஏற்றிருந்தால் எனக்கு அது எப்படியான ஒரு விஷயமாக திரும்பியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது, ராம் சரணின் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

அதனால், நான் மறுத்துவிட்டேன். எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் வந்தால், நான் அதை யோசிப்பேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *