
சென்னை: கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்று விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய 3 துறைகள் தான் மிகவும் முக்கியம் என்று கூறப்படும் நிலையில், அவற்றுக்கு சராசரியாக ஒதுக்கப்பட வேண்டியதை விட குறைவான நிதியை தமிழகம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.