
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன எடுக்க கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதற்குமுன்பே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடந்தது.
இந்த நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.
இது மீண்டும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் (Protected Agricultural Zone – PAZ)” சட்டம், 2020ஐ இயற்றி அதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இப்பகுதியில் ஹைட்ரோகார்பன், நிலக்கரி படிகேஸ், இயற்கை எரிவாயு, நிலத்தடி நீர் உப்பீடு, சுரங்கங்கள் மற்றும் பிற சுரங்க திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை என்றும், தமிழக அரசு இவ்விடயத்தில் தன் நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது.
இதற்கிடையில், M/s. Oil and Natural Gas Corporation Ltd., (ONGC) சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) M/s. Oil and Natural Gas Corporation Ltd., (ONGC)க்கு சுற்றுச்சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியச் செய்தி தமிழக அரசு கவனத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து, ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்பப் பெறுமாறு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டமான கொள்கை.
எனவே, தமிழகத்து மட்டுமின்றி எதிகாலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் இதுபோன்ற திட்டங்களை செய்ய தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.