• August 25, 2025
  • NewsEditor
  • 0

ராணுவ வீரர் கந்தன்

சிந்தூர் ஆப்பரேஷனில் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை துல்லியமாக தாக்கி அழித்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் டி.கந்தனுக்கு, புனேயில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்கப்பதக்கம் வழங்கி அரசு கௌரவித்தது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகிலுள்ள வண்டல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.கந்தன்.

விவசாய குடும்பத்தில் பிறந்து சிவகங்கை துரைசிங்கம் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றவர், 1997-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இரண்டு ஆண்டுகள் தொழில்நுட்ப பயிற்சி எடுத்தவர், பின்பு எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

பாகிஸ்தான் ட்ரோனை நடுவானில் அழித்து சாதனை

சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் என்.எஸ்.ஜி-யின் விமானக் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்றார்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தானுக்கு எதிரான சிந்தூர் ஆபரேஷனில் பங்கு கொண்டு பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை நடுவானில் அழித்து சாதனை படைத்தார்.

நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும், சிவகங்கை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ள கமாண்டோ வீரர் டி.கந்தனிடம் பேசியபோது, “ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானிய ராணுவத்தினர் நம்முடைய ஆயுதக் கிடங்கை அழிக்க ட்ரோன்களை அனுப்பினர்.

அப்போது ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவர்கள் அனுப்பிய ட்ரோனை சுட்டு வீழ்த்தினேன்.

ராணுவ வீரர் டி.கந்தன்

நூலிழை தவறி இருந்தாலும் உயிரோடு இருந்திருக்க மாட்டேன், நாட்டுக்காக அதைச் செய்தேன், அதே இடத்தில் வைத்து அழித்தால் சரியாக இருக்காது என்பதால் ட்ரோனை வரவிடாமல் தடுத்து அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் முன்னேறிச் சென்று அடித்து நொறுக்கினேன்.

இந்த ஆபரேஷனில் நாம் எதையும் இழக்கவில்லை, பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்தோம். இதற்கு முன்பு பிளாக் கமாண்டோவில் 2019 -ல் இருந்து 2022 வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

மிக ஆபத்தான பணி என்றாலும் அங்கு பணியாற்றிய அனுபவம்தான் ஆபரேஷன் சிந்தூரில் எனக்கு உதவியாக இருந்தது. நான் இளங்கலை வேதியியல் படித்ததால் அறிவியல் பற்றி அறிந்திருந்தேன்.

அந்த கல்வியும் இத்தகைய நேரத்தில் சமயோசிதமாக செயல்பட உதவியது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஆபரேஷன் சிந்தூர் என்று மட்டும் தெரிந்திருக்கும், ஆனால் அது வெறும் ஆபரேஷன் அல்ல, உண்மையான போர்” என்றார்.

சல்யூட் சார்.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *