• August 25, 2025
  • NewsEditor
  • 0

பகல்பூர்: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் பாகிஸ்​தானியர்​கள் 2 பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. பாகிஸ்​தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்கு வந்த பாகிஸ்​தான் பெண்​கள் 2 பேருக்கு வாக்​காளர் அடை​யாள அட்டை வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், சமீபத்​தில் பிஹாரில் மேற்​கொண்ட தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​யின் போதும், அவர்​கள் இரு​வரின் வாக்​காளர் அட்​டைகள் சரி​பார்க்​கப்​பட்​டுள்​ளன.

மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் உத்​தர​வின் பேரில் நடத்​தப்​பட்ட ஆய்​வில் இவர்​கள் பாகிஸ்​தானியர்​கள் என்று தெரிந்​துள்​ளது. மேலும், தற்​போது அவர்​கள் வயது மூத்​தவர்​களாக இருப்​ப​தா​லும், வாக்​காளர் தீவிர திருத்​தப் பணி​களின் போது அவர்​களால் சரியான தகவல்​களை அளிக்க முடிய​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர்​கள் இரு​வரின் பெயர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *