• August 25, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்/ சென்னை: ​ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்​து, உடனடி​யாக இந்த அனு​ம​தியை திரும்ப பெறு​மாறு மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மத்​திய அரசின் புதிய எண்​ணெய் எடுப்பு கொள்கை அடிப்​படை​யில் தமிழகத்​தில் ராம​நாத​புரம், சிவகங்கை மாவட்​டங்​களில் 1,403 சதுர கி.மீ. பகு​தி​யில் ஹைட்​ரோ ​கார்​பன் எடுக்க எண்​ணெய், இயற்கை எரி​வாயு கழகம் (ஓஎன்​ஜிசி) அனு​மதி பெற்றது. இதில் முதல் கட்​ட​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் தனிச்​சி​யம், பேய்​குளம், வல்​லக்​குளம், அரியக்​குடி, காவனூர், சிறு​வயல், ஏ.மணக்​குடி உள்​ளிட்ட பகு​தி​களில் 20 ஹைட்ரோ கார்​பன் கிணறுகளை ரூ.675 கோடி செல​வில் தோண்டதிட்​ட​மிட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *