
சென்னை: தமிழகத்தில் ஏஐ வளர்ச்சியை மேம்படுத்த, 35 அரசுத் துறைகள், 38 புத்தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் மூலம் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கி வரும் ஐடிஎன்டி மையம், ஐசிடி அகாடமி, எல்காட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த புதுமைகளுடன் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த ரூ.13.93 கோடியில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் கடந்த 2024-ல் தொடங்கப்பட்டது. ஏஐ மூலம் சமூக சவால்களை எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்த இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.