
சென்னை: கரூரில் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி, கரூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.