
மதுரையில் நடந்த தவெக 2வது மாநில மாநாட்டில் விஜயகாந்த் குறித்துப் பேசியிருக்கும் விஜய், “எம்ஜிஆரைப் போல் குணம் படைத்த எனது அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவரும் இதே மதுரையை மண்ணைச் சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?” என்று பேசி இருந்தார்.
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், சமீபத்தில் விஜயகாந்த்தின் பெயரை, புகைப்படத்தை சினிமாவிற்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தவெக மாநாட்டில் விஜயகாந்த் குறித்து விஜய் பேசியிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்துத் தெரிவித்திருக்கும் பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதற்காக தவெக உடன் கூட்டணி சேருவோம் என்று அர்த்தம் கிடையாது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி 9ஆம் தேதி நடக்கவுள்ள கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்” என்று பேசியிருந்தார்
தற்போது தேமுதிக தலைமை அலுவலகத்தில் இதுகுறித்துப் பேசியிருக்கும் பிரேமலதா, “விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய்காந்த்துடன் 17 திரைப்படங்கள் பண்ணியிருக்கார். இன்னைக்குதான் விஜய் உங்களுக்கெல்லாம் தெரியும். எங்களுக்கு விஜய் நடிகராவதற்கு முன்பிருந்து, அவரை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறோம்.
என்னைப் பொறுத்தவரைக்கும் என் பிள்ளைகளைப் போல விஜய்யும் எனக்கொரு பிள்ளைதான். நாங்கள் அவரை தம்பி என்கிறோம், அவர் விஜயகாந்த் அவர்களை அண்ணன் என்கிறார். இது எங்களின் தனிப்பட்ட அன்பு.
அரசியலுக்காக விஜயகாந்த்தைப் பயன்படுத்துகிறார், வாக்கிற்காகப் பயன்படுத்துகிறார் என்றால் அதை மக்களும் ஏற்க மாட்டார்கள், நாங்களும் ஏற்க மட்டோம்” என்று பேசியிருக்கிறார் பிரேமலதா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs