
மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன்.
தமிழில் கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா (2016)’ படத்தின் மூலம் சிம்பு உடன் ஜோடி சேர்ந்து அறிமுகமான மஞ்சிமா, அந்தப் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து ‘சத்ரு’, ‘இபோத் எந்நைக்கு’, ‘தீபம்’, ‘துருவங்கள் 16′ போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கெளதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்து, அவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் உடல் எடை குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் மஞ்சிமா, “சினிமாதான் என்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கம். நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. உடல் எடையைக் குறைத்தால் நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
நானும் இந்த உடல் பருமனைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். அது நடக்கிறமாதிரி தெரியல. சர்ஜரிகூட பண்ணிடலாம்னு யோசிச்சேன்.
எனக்கு PCOD பிரச்னை இருக்கு. அதனால கொஞ்சம் எடை அதிகமாக இருக்கிறேன். உடல் எடையைவிடவும், PCOD பிரச்னையைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். அதனால் உடல் எடையைப் பற்றி எனக்கு இப்போது கவலையில்லை” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…