
புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி (நாளை) முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதவிர, தற்போது தபால் சேவைக்கான சுங்க கட்டணத்திலும் அமெரிக்கா மாற்றம் செய்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பார்சல்களுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.