• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை கண்ணகிநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 23) மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.

இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும் மின்சார வாரியத்தின் கவனக்குறைவுதான் என்று அரசின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

கண்ணகி நகர் சுவரோவியங்கள்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான், இப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வரலட்சுமி அவர்கள் உயிரிழந்த பகுதியில் மின்சார கசிவு இருப்பது குறித்து மணிகண்டன் என்பவர் மின்சார வாரிய அலுவலகத்தில் 2 முறை புகார் அளித்துள்ளார்.

ஆனால், அந்தப் புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

மேலும், தூய்மைப் பணிகள் போன்ற அரசின் அடிப்படைப் பொறுப்பு தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம்.

சீமான்
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த சீமான்!

வரலட்சுமி ஓய்வுபெறும் வயதில் ரூ.85 லட்சம் ஈட்டியிருப்பார். உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.20 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.

எதிர்காலத்தில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அரசு மின் விநியோகத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

குறிப்பாக மழைக்காலம் நெருங்குவதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *