
கண்ணகி நகர்: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (30) இவர்களுக்கு இவருக்கு 10 வயதில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 8 வயதில் மணி என்ற ஆண் குழந்தையும் உள்ளது. வரலட்சுமி கண்ணகி நகர் பகுதியில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.