
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இந்தியாவின் தலைநகரம் டெல்லி..நம் தமிழ்நாட்டின்தலைநகரம் மெட்ராஸ்(சென்னை). நடுநிலைப்பள்ளியிலிருந்தே போதிக்கப்பட்ட பாடம் இது.
அதிலும் ஆசிரியர் சென்னையைப் பற்றி சொல்வதைத் கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினாவை அவர்வர்ணிக்கும்போது எங்களுக்கு வங்காளவிரிகுடா அலைகளில் மிதப்பது போலவும் மெரினா மணலில் புரள்வது போலவும் வரும் ஆனந்தம் சொல்லிமாளாது.
தீப்பெட்டியை அடுக்கினாற் போலுள்ள எல்ஐசி கட்டிடத்தின் பதினான்கு மாடியை எண்ணும் போது நான் வியப்பில் அதன் உச்சியிலுள்ளதாக பூரித்து கத்தியிருக்கிறேன். வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய ரிப்பன் பில்டிங் மற்றும் பாலங்கள் வணிக வளாகங்கள் இவற்றின் நேர்த்திவியக்க வைத்திருக்கிறது.
அறிஞர் அண்ணாசமாதி, சாந்தோம்சர்ச், மகாபலிபுரம்கடற்கரை மண்டபங்கள்சிற்பங்கள்,காஞ்சிபுரம் கோயில்கள், கன்னிமாராநூலகம் , கண்ணகி சிலை,சென்ட்ரல் ஸ்டேஷன் ,ஏர்போர்ட் என ஒவ்வொன்றும் எப்போது சென்னையைப் பார்ப்போம் என்று ஆவலைத் தூண்டியது.நம்மகோயமுத்தூர் ஏன் அப்படியில்லை என்ற ஏக்கமும் தோன்றியது.
ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின் என் அண்ணன் சென்னையில் வேலை பார்த்தபோது கல்லூரி விடுப்பில் என்னை அழைத்துச் சென்றார். முதன்முறையாக ட்ரெயினில் அதுவும் என் ஆத்மார்த்த உலகமான சென்னைக்கு. சந்தோஷத்திற்கு அளவேயில்லை. மனமாற சென்னையைச் சுற்றி பார்த்தேன். ஆசிரியர்கள் அன்று விவரித்ததன் பிரமாண்டம் புரிந்தது.
இங்குதான் என் அபிமான சினிமா நட்சத்திரங்கள் ஸ்டூடியோக்கள் தியேட்டர்கள் ஷூட்டிங் இடங்கள் இருப்பதை நினைத்து பெருமையாக இருந்தது. கமலஹாசன் ரஜினிகாந்த் படங்கள் பார்க்க விரும்பிய என்னை அண்ணன்கள் அழைத்துப் போனதோ எக்ஸார்ஸிஸ்ட்ஓமன்படங்களுக்கு.அப்போது தான் தைரியம் வருமாம்.
அதன்பின் கணவருடன் வேலை சம்பந்தமாக சென்னை வந்து சுற்றிப்பார்த்தது மகிழ்ச்சியாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.
அங்கிருந்த மனிதர்களின் வேகமும் தைரியமும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மையும் பிடித்தது. இங்கு மெதுவாப்போறவங்க யாருமில்லை. என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.பணிமுடிந்து வீடு திரும்பும் பெண்களிடம் சோர்வு ஏதுமின்றி வீட்டிற்குச் சென்றதும் செய்ய வேண்டிய கடமைகளுக்கான முன்னெடுப்பு தெரிந்தது.சென்னை மக்களின் வாழ்க்கை முறை எனக்கு ஒரு உத்வேகத்தைக்கொடுத்ததுபோல் உணர்ந்தேன்.

அதன்பிறகு கோவையில் பணிக்கால இடையில் எங்கள் தரப்புக்கு வழங்கிய ஊதிய விகிதம் அதிகம் எனப் பிடித்தம் செய்த போது கலங்கி நின்ற எங்களால் ஏதும் செயல்பட முடியாதென நினைத்தார்கள். திகைப்பின்முடிவில் சென்னை சென்றால் தீர்வுகிடைக்கும் என்றஎ ண்ணம் தோன்ற தோழியும் நானும் கிளம்பினோம். இரவு கிளம்பி அதிகாலை சென்ட்ரல் வந்த நாங்கள் அங்கிருந்தோர் உதவியுடன்ஓய்வறையில்
குளித்துதெளிவாகி அங்கிருந்த சரவணபவன் உணவகத்தில் சிற்றுண்டியை முடித்தபோது சென்னை எங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்ததை உணரமுடிந்தது.
வழிகேட்டு தலைமைச் செயலகம் சென்றோம். தடையேதுமின்றி உரிய அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம்(எங்களை பாரத்தால் பாவமாகத் தெரிந்ததோ என்னவோ) தரமுடிந்தது.
கோவையிலேயே இதை சரி செய்யமுடியும் என்று நம்பிக்கை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. நிம்மதியுடன் கோவை திரும்பிய எங்களுக்கு உயர் அதிகாரிகளை பார்க்க விடாமலேஎங்கள் உரிமை மறுக்கப்பட்டது. சென்னையில் எங்களுக்குக் கிடைத்த நம்பிக்கையின் அடிப்படையில் கஜினி முகமது போல்விடாது படையெடுத்தோம். தலைமைச்செயலகத்தின் ,நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஒவ்வொரு செங்கல்லும் எங்களது கோரிக்கையையும் விடாமுயற்சியையும்உணரும்படியான
முயற்சிகளைமேற்கொண்டோம்.முயன்றுவெற்றி கண்டோம்.எங்கள் உரிமையை மீட்டோம்.மாநிலத்தின்பிற பகுதியிலிருந்த பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் இது உதவியாகஇருந்தது.
சென்னையில் எங்களுக்கு வழிகாட்டி உதவிய அலுவலக உதவியாளர்கள் முதல் ஐ.ஏ.எஸ்மற்றும் அமைச்சர்கள் வரை குறிப்பாக சுப்புராஜ் ஐ.ஏ.எஸ்,ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்,இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோரை வாழ்நாள்முழுவதும் மறக்கமுடியாது.
சென்னையின் சூழலும் அங்குள்ள மக்களின் மனிதாபிமானமும் அதிகாரிகளின் முறையான ஒத்துழைப்பும் எங்களது துன்பத்தைப் போக்கியது. அதன்பிறகு சென்னை எனக்கு தாய் வீடு போலாகிவிட்டது. என்வாட்டத்தைப்போக்கி சென்னை எனக்குத் தந்த நம்பிக்கையையும் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் ஆற்றலையும் வைத்து தனியாக என்னால் உலகம் முழுவதும் பயணிக்க முடியும்என்ற தெளிவை என்னுள் விதைத்தது.
ராயல் சல்யூட் டூ சென்னை தி கிரேட்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!