
சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் "உங்கள் விஜய்–எளியவனின் குரல் நான்" என சமூக வலைத்தளத்தில் செல்பி பகிர்ந்துள்ள நடிகர் விஜய் முதலில் திருவள்ளுவரின் திருக்குறளையும், பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும், இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா எழுதிய ஏகாத் மாணவ தர்ஷன் மனிதநேய இலக்கணத்தையும் நன்கு புரிந்து படிக்க வேண்டும்.