• August 23, 2025
  • NewsEditor
  • 0

காஞ்​சிபுரம்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றால் ஏழை மீனவர்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக்​கொடுக்கப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் க.பழனி​சாமி நேற்று செய்​யூர், மது​ராந்​தகம், செங்​கல்​பட்டு ஆகிய சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் மக்​களை சந்​தித்து பேசி​னார்.

செய்​யூர் பேருந்து நிலையம் அருகே மக்​கள் மத்​தி​யில் அவர் பேசி​யது: இந்​தப் பகுதி விவ​சா​யிகள் அதி​கம் நிறைந்த பகு​தி. ஆனால், திமுக அரசு விவ​சா​யிகளுக்கு எது​வும் செய்​ய​வில்​லை. கடந்த அதி​முக ஆட்​சி​யில் தொடக்க வேளாண்மை கூட்​டுறவு சங்​கங்​களில் இரு​முறை பயிர்​கடன்​களை தள்​ளு​படி செய்​தோம். விவ​சா​யிகளுக்​காக குடிம​ராமத்து திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. அதன் மூலம், ஏரி, குளங்​கள், கண்​மாய்​கள் தூர்​வாரப்​பட்டு நீர்த்​தேக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *