
அக்டோபரில் ‘ஆர்யன்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் படம் ‘ஆர்யன்’. நீண்ட மாதங்களாக இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.