
பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளார்.
துபாய்யை மையமாகக் கொண்ட பைலேட்ஸ் அகாடமியின் கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங்கியுள்ளார் சாரா.
Sara Tendulkar பின்னணி
சாரா ஒரு பதிவு செய்யப்பட்ட ஊட்டசத்து நிபுணர். மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறையியல் பயின்றுள்ளார். பைலேட்ஸ் என்பது மனம் மற்றும் உடலை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சி முறையாகும்.
வாழ்த்திய சச்சின்
சாரா தன் விருப்பத்துக்கு ஏற்ற தொழிலை தொடங்கியுள்ளது குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ந்துள்ளார் சச்சின்.
அவரது பதிவில், “ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகள் உண்மையாகவே விரும்பி செய்யும் ஒன்றை ஒருநாள் கண்டடைவார்கள் என நம்புவீர்கள். சாரா ஒரு பைலேட்ஸ் ஸ்டூடியோவைத் திறப்பது எங்கள் இதயத்தை நிரப்பும் தருணங்களில் ஒன்றாகும்.
இந்தப் பயணத்தை அவள் தன் கடின உழைப்பாலும் நம்பிக்கையாலும், செங்கல் செங்கலாக கட்டி எழுப்பியிருக்கிறாள்.
ஊட்டச்சத்தும் இயக்கமும் எப்போதும் நம் வாழ்வில் முக்கியமானவை, இந்த எண்ணத்தை அவளது சொந்த குரலில் முன்னெடுத்துச் செல்வதைப் பார்ப்பது சிறப்பானது.
சாரா, நாங்கள் இதைவிட பெருமையாக இருக்க முடியாது. உன்னுடைய இந்த பயணத்துக்கு வாழ்த்துகள்” என எழுதியிருக்கிறார்.