
ஏற்கெனவே பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்காளர்களை நீக்குகிறார்கள், அவர்களுக்கு தேவையான வாக்காளர்களைச் சேர்க்கிறார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் எழுந்துகொண்டிருக்கிறது.
இதை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு
இந்த நிலையில், கேரளா பாஜகவின் துணைத் தலைவர் B.கோபாலகிருஷ்ணன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
2024-ம் ஆண்டு திருச்சூர் மக்களவைத் தேர்தலில் சட்டத்திற்குப் புறம்பாக வாக்காளர் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கோபலகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது.
திருச்சூரில் நடந்தது என்ன?
அதற்கு அவர், “சந்தேகமே இல்லை. நாங்கள் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களைச் சேர்ப்போம்.
எங்களுக்கு சாதகமாக இருக்க, தொகுதிகளில் வெற்றி பெற, எங்களது கட்சி ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களைக் அழைத்து வருவோம்.

நாளைக்கே அவர்களைக் கூட்டி வந்து, ஓராண்டிற்கு அவர்களை இங்கே தங்க வைத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வோம்.
திருச்சூரில் நாங்கள் போலி முகவரியைக் கொடுத்து வாக்காளர்களை இணைக்கவில்லை. முகவரியின் உரிமையாளருக்கு தெரியாமல், அந்த முகவரியில் வெளியாள்கள் சேர்க்கப்பட்ட ஒன்றிரண்டு வழக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்” என்று பேசியுள்ளார்.