
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இதில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷண், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளனர். இதன் டீஸர் ஆக. 27-ம் தேதி வெளியாகிறது.