
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். அப்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உட்பட ஐரோப்பிய தலைவர்கள் உடன் இருந்தனர்.