• August 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகம் முழு​வதும் உள்ள கைவிடப்​பட்ட குவாரி​களை வேலி அமைத்து பாது​காப்​பது தொடர்​பான செயல் திட்​டத்தை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. மதுரை சொக்​கி​குளத்​தைச் சேர்ந்த சத்​தி​யமூர்த்​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக கனிமவளச் சட்​டத்​தின்​படி கைவிடப்​பட்ட குவாரி​களை பராமரிப்புச் செய்​வதற்​காக பசுமை நிதி உரு​வாக்​கப்​பட்​டது.

இந்த நிதி​யில் கைவிடப்​பட்ட குவாரி​களைப் பராமரிக்​க​வும், கண்​காணிக்​க​வும் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் கனிமவள உதவி இயக்​குநர், மாவட்ட வரு​வாய் அலு​வலர், பொதுப்​பணித்​துறை செயற் பொறி​யாளர், சுற்​றுச்​ சூழல் அலு​வலர், மாசு கட்​டுப்​பாட்டு வாரிய அலு​வலர், தீயணைப்பு துறை அலு​வலர் அடங்​கிய குழு அமைக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *