
நெய்வேலி: ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என தமிழக முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நெய்வேலியில் உள்ள திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தை பார்த்து மனம் உருகி கண்ணீர் விட்டு அழுதார், அவருடன் அவர் மகன் விஜய பிரபாகரனும் விசில் அடித்துக் கொண்டே அழுதார்.
தமிழ் திரையுலகில் 1979-ம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை போன்ற திரைப்படங்கள் மூலம் பட்டித் தொட்டிகள் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த விஜயகாந்த் நடித்து 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம்தான் விஜய்காந்த்துக்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது. இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.