• August 22, 2025
  • NewsEditor
  • 0

விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய படத்தின் வெளியீட்டைப் போல ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தின் முதல் காட்சியை கொண்டாடித் தீர்த்தனர்.

விஜயகாந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் காணும் ரசிகர்கள் பலர் இந்த ரீ-ரிலீஸில் கண் கலங்கவும் செய்கிறார்கள்.

Captain Prabhakaran Re- Release – RK Selvamani

படத்தின் ரீ-ரிலீஸை இன்று சென்னை கமலா திரையரங்கில் இயக்குநர் செல்வமணி, மன்சூர் அலி கான், விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் எனப் பலரும் கண்டு மகிழ்ந்தனர்.

படம் முடித்ததும் செய்தியாளர்களிடம் ரீ-ரிலீஸ் தொடர்பாக இவர்கள் அனைவரும் பேசினார்கள்.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, “அன்று படத்தை எப்படிக் கைதட்டிக் கொண்டாடினார்களோ, அதுபோன்றதொரு வரவேற்புதான் இன்றைக்கும் இருக்கிறது.

ஆனால், விஜயகாந்த் சார் இந்தத் தருணத்தில் இல்லாதது மட்டும்தான் வருத்தத்தை அளிக்கிறது.

இன்று ரீ-ரிலீஸாகி இருக்கும் எங்கள் படத்திற்கு பெரும் ஆரவாரம் கிடைத்து வருவதாகத் தகவல் சொன்னார்கள். இங்கும் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கிறது.

Captain Prabhakaran Re- Release - RK Selvamani
Captain Prabhakaran Re- Release – RK Selvamani

விஜயகாந்த் சார் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கில் கைதட்டல்கள் பறக்கின்றன.

1000 நடிகர்கள் வேண்டும், 100 குதிரைகள் வேண்டும் எனக் கேட்கும்போதெல்லாம் சலிக்காமல் எனக்கு அனைத்திற்கும் துணையாக நின்ற இப்ராஹிம் ராவுத்தர் சாரையும் நான் மறக்கமாட்டேன்,” என்றவர், “சண்முகப் பாண்டியன் நடித்திருந்த திரைப்படத்தைப் பார்த்திருந்தேன்.

விஜயகாந்த் சாரைப் போல ஒரு இன்ச்கூட குறையாமல் நடிக்கிறார். படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்டதால் எங்களிடம் படத்தின் நெகடிவ் இல்லை.

அதனால் படத்தின் பிரின்டிலிருந்துதான் ஒவ்வொரு பிரேம்களையும் மெருகேற்றி இப்போது வெளியிட்டிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு நான் ‘கேப்டன் பிரபாகரன் 2’ எடுக்கலாம் எனத் திட்டமிட்டேன்.

செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், அந்தச் சமயத்தில் ‘புஷ்பா’ திரைப்படம் வெளியானதால் அதை நிறுத்திவிட்டேன்.

Captain Prabhakaran Re- Release - RK Selvamani
Captain Prabhakaran Re- Release – RK Selvamani

இப்போது இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் பலர் ‘புஷ்பா’ படத்தின் காட்சிகள் போலவே இருக்கிறது என்கிறார்கள். இப்படியான படங்களை எடுக்கும்போது இதுபோன்ற ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்யும்.

அந்தச் சமயத்தில் இரண்டாம் பாகத்திற்கு கதாநாயகன் கிடைக்கவில்லை. இன்று சண்முகப் பாண்டியன் என் முன் இருக்கிறார். அவரை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *