
நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லை என்று வருந்துகிறேன்.
மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவர் பாஜக-விற்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேந்த சி.பி.ராதகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவைக் கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார். தமிழ் மண், மக்கள், மொழி மீது பிரதமர் மோடி பற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளின் முதுகெலும்பை முறித்துக்காட்டியவர் பிரதமர். நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா கொண்டு வரப்பட்டது.
பிரதமர்கள், அமைச்சர்கள், குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அந்த மசோதா கூறுகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் சிறை சென்றாலும் பதவியில் நீடிக்கின்றனர். சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா? இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்பு சட்டம் என்று இந்த மசோதாவைக் கூறுகிறார்.

தமிழ் மக்களை முன்னேற்றுவதற்கானக் கூட்டணிதான் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். திமுகவின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவது தான். நான் சொல்கிறேன் ஒரே நாளும் உதயநிதி முதல்வராக முடியாது. அதேபோல ராகுல் காந்தி பிரதமராக முடியாது. திமுக-வை தமிழகத்தில் வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.