
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘தி பாட்ஸ் ஆப் பாலிவுட்’ என்ற வெப் தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆர்யன் கான் இயக்கும் இந்தப் தொடரில் ராகவ் ஜுயால், மனோஜ் பஹ்வா, மோனா சிங், அன்யா சிங், கௌதமி கபூர், ரஜத் பேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சல்மான் கான், கரண் ஜோஹர் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றனர்.
இந்த தொடரின் பிரிவியூ நிகழ்ச்சி மும்பையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷாருக்கான், தனது மகன் மற்றும் படக்குழுவினரை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தனக்கு கொடுத்த அன்பில் 150 விழுக்காடு தனது மகனுக்கு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் ஷாருக்கான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
30 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்விக்கும் வாய்ப்பை வழங்கிய புனித நகரமான மும்பைக்கும், இந்தியாவிற்கும் நன்றியுடையவனாக இருப்பேன்.
தனக்கு கொடுத்த அன்பில் 150 விழுக்காடு தனது மகனுக்கு கொடுக்க நீங்கள் வேண்டும். இந்த மண்ணில் தனது மகன் முதல் அடியை எடுத்து வைக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுவதற்கும், ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெறுவதற்கும் உத்தரவாதம் இல்லை என்பதை தனது மகனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் தனது வலது கையில் காயம் காரணமாக சிறு அறுவை சிகிச்சை செய்திருப்பதாகக் கூறிய ஷாருக்கான், தேசிய விருதை ஏந்த தனக்கு ஒரு கை போதும் என்றும் நகைச்சுவையாகவும் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…