• August 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்​டுப்​பாடு​களை, சென்னை காவல் துறை விதித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இந்து அமைப்​பு​கள் சார்​பில், அன்​றைய தினம் பொது இடங்​களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்​கப்பட உள்​ளன. பின்​னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் ஊர்​வல​மாக எடுத்து செல்​லப்​பட்டு கடற்​கரைகள் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் கரைக்கப்படும்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் இந்து அமைப்பு நிர்​வாகி​களு​டன் காவல் கூடு​தல் ஆணை​யர்​கள் கண்​ணன் (தெற்​கு), பிர​வேஷ்கு​மார் (வடக்​கு), கார்த்​தி​கேயன் (போக்​கு​வரத்​து) உள்​ளிட்​டோர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *