• August 22, 2025
  • NewsEditor
  • 0

இன்றைய வாழ்க்கைச்சூழல், நம் அன்றாட பணிகளைக்கூடச் சுமைகளாக மாற்றிவிட்டது.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, செய்தித்தாள் படிக்க நேரமில்லை, குழந்தைகளோடு விளையாட நேரமில்லை, புத்தகம் வாசிக்க நேரமில்லை. இப்போது சாப்பாடுவரை வந்து நிற்கிறது நேரமின்மை. உணவைத் தட்டிக்கழிக்க நேரமின்மை, பசியின்மை, ஆரோக்கியத்தின்மீது காட்டும் அலட்சியம் போன்றவையே முக்கியமான காரணங்கள்.

Less eating

சாப்பிடாமல் இருப்பதைவிட ஆபத்தானது, பசியிருந்தும் போதுமான அளவுக்குச் சாப்பிடாததும் அரைகுறையாகச் சாப்பிடுவதும்.

இதை `Hangry’ என்று மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். வயது, பாலினம், உடலுழைப்பு, வயது இவற்றையெல்லாம் பொறுத்து ஒருவருக்குத் தேவைப்படும் கலோரிகளின் அளவு மாறுபடும். என்றாலும், நீண்ட நாள்களுக்குப் போதுமான அளவு உணவு உட்கொள்ளவில்லையென்றால் என்னென்னவோ விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

“உதாரணமாக, ஹார்மோன் குறைபாடுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது (Hypoglycemia), வைட்டமின் குறைபாடுகள், ரத்தச்சோகை, தலைவலி, மனநிலையில் மாற்றங்கள், இதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரலில் பிரச்னை, ரத்த ஓட்டம் சீர்கெடுவது இப்படிப் பல பிரச்னைகள் ஏற்படலாம்.

போதுமான அளவுக்குச் சாப்பிடாவிட்டால் எந்தெந்த உறுப்புகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்” எனப் பட்டியலிடுகிறார் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன்.

Eating
Eating

மூளை: தலைவலி, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படலாம்.

இதயம்: சில நாள்களிலேயே இதயமும், தசைகளும், உள்ளுறுப்புகளும் குளுகோஸ் உற்பத்தி செய்வதைப் படிப்படியாகக் குறைத்து விடலாம்.

கல்லீரல்: உங்கள் கல்லீரலில் குளுகோஸ் அளவு குறையும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Hypoglycemia) குறையும்.

சருமம்: உங்கள் உடல் வறட்சி நிலையை அடையத் தொடங்கும். உடலில் சோடியம், பொட்டாசியம், நீர்ச்சத்து மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் எல்லாமே குறையும்.

அடிவயிற்றுப் பகுதி: ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு, இதன் காரணமாக முறையற்ற மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படலாம்.

புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரின் உடல்வாகும் வேறுபடும். எனவே, மற்றவர்களின் சாப்பாட்டு அளவோடு உங்களுடையதை ஒப்பிடக் கூடாது.

உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அதிலிருந்து ஆரம்பியுங்கள். கலோரி அளவைத் தெரிந்துகொள்ள, கலோரி கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.

உடல் எடையை அப்படியே பராமரிக்க நினைப்பவர்கள் மட்டும், இதைப் பின்பற்றலாம். உடல் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ நினைப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *