
காஞ்சிபுரம்: ‘சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது காஞ்சிபுரம் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பினர் அவரை சந்தித்தனர்.