
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை கருத்தியல் யுத்தமாக முன்னெடுக்க காங்கிரஸ், திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்வாக குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்கிய இடத்தில் வைத்திருப்பதாகவும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தேர்தலின்போது வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.