
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
புதிய தலைமுறையில் கேப்டன்களை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள ரஹானே, “மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை.
புதிய உள்நாட்டு சீசன் தொடங்க உள்ள நிலையில், ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.
எனவே, கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். ஒரு வீரராக மும்பை அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…