• August 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் வகை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது என உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்​றம், தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக வாங்​கிய சம்​பளத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும் என அறி​வுறுத்​தி​ உள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் வகை​யில் மாநக​ராட்​சி​யில் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, தூய்​மைப் பணிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாருக்கு வழங்​கியதை கண்​டித்து மாநக​ராட்சி அலு​வல​கம் முன்பு துப்​புரவு பணி​யாளர்​கள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். 13 நாட்​களுக்கு பிறகு, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் அவர்​கள் அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *