
த.வெ.க-வின் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜயை காணமுடியாததால், மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு முதல் நாள் இரவே வந்துள்ளனர் பெங்களூர் தம்பதியினர்.
“போன மாநாட்டில விஜய் அண்ணாவ பார்க்க முடியல. அதனால இந்த மாநாட்டுக்கு ஒருநாள் முன்னாடியே வந்திட்டோம். விஜய்காந்தை மிஸ் பண்ணிடீங்க விஜய்யை மிஸ் பண்ணிறாதீங்க. தமிழ்நாடு மோசமான நிலையில் இருக்கு. இதற்கு ஒரு மாற்றம் வேண்டும்.
நீங்க போடுற ஒரு ஓட்டால தமிழ்நாட்டோட தலையெழுத்து மாறும். என் கடைசி ஆசையே அதான். இறப்பதற்குள் நடிகர் விஜய்யை நேரில ஒரு முறையாவது பார்த்திடணும். அவர் வீட்டு வாசலுக்கு மாசத்துக்கு நாலு டைம் போயிருவேன் ஆன அவரைப் பார்க்க முடியாது. அவரை எப்படியாச்சும் பாத்தரனும். அதுதான் என்னோட கடைசி ஆசை” என்று அந்த ரசிகர் பேசினார்.